'தருணம் இதையா!'
'தருணம் இதையா என அறிந்தார்'
'ஆற்றிய நினைவகம் வணங்கிடுவோம்'
'அருணகிரி நினைவகம் வணங்கிடுவோம்'
காவற் காரப் பெருமாள்தான்
கருணையைக் காட்டிதன் உயிர்காக்க
ஆவல் பொங்கிட நன்றிசொனான்
அதன்வழி வாய்த்தன சந்தத்தேன்
வேலைக் காரப் பெருமாளின்
விருப்புடை மொழியிலே புகழ்கோர்த்து
மாலை ஆயிரம் புனைந்தவர்க்கு
மாண்புசெய் கடனுள(து) என்றுணர்ந்து.
வேளைக் காரப் பெருமாளை
வேண்டியே தினமவர் திருப்பணியில்
தோள்சே(ர்) அன்பரின் துணையாலே
தோற்றம்இவ் வெழில்மணி மண்டபமாம்.
தருணம் இதையா எனஅறிந்தார்
தரத்தொடு தந்தனர் காணிக்கை -
வருநாள் கூடிடும் இளையர்க்கு
வழங்கிடும் வசதிகள் பலஇங்கே
அன்னை விரும்பி யகுறமானை
அடிக்கடி பாக்களில் சொன்னவர்க்கு
மின்ன ணுநூலக மரியாதை -
மேதினி தமிழவர் பயன்பெறவே
‘அன்பொ டுதுதிக் கமனம்அருள்’
அழகனின் செவிகளில் உரைத்தனுக்(கு)த்
தென்படும் ஆலயம் அருணையிலே;
தேவைஇச் சிறப்புநம் திருப்புகழ்க்கு முப்பு ரமெரிசெய் தஅச்சிவனின்
முத்தமாம் முருகனைப் பூசித்தத்
தப்பிலா(த) அடியவர் நம்நினைவு
தப்பிடா முயற்சியை அனுபவிப்போம்.
பத்தர் கணப்ரியன் தருமுக்தி
பட்சியாய்ப் பெற்றதோர் பக்குவத்தான்!
அத்தனை பேறுடை அருணகிரிக்(கு)
ஆற்றிய நினைவகம் வணங்கிடுவோம்.

★★★

அடியார்களுக்கு அருளும் முருகப்பெருமான்

அடியார்களுக்கு முருகப்பெருமான் அருளும் திறத்தைப் பல பாடல்களில் தெரிவிக்கிறார் அருணகிரியார். அடியார் இடைஞ்சல் களைபவன் ; அருட்கண் பார்வையினால் அடியார் தம்மை மகிழ்வோடு அழைத்துச் சேதிகள் பேசுபவன்; செஞ்சொலடியார்கள் வாரக்காரனாக ஏவல் செய்பவன்; அடியார் தம்மை நாடொறும் நிகரற்றவரெனவே மகிழ்பவன்; தன்னை வணங்கும் பக்தர் அனைவரும் தழைக்க நெறியில் நிற்பவன் ; துதி செய்யும் சுத்தப் பத்தியர் துக்கங்களை களைபவன்; வேத மொழி மெத்த ஓதி வருபக்தர் வேதனை தவிர்ப்பவன் ; பக்தர்களுக்கு துணை நிற்கும் புதியவன்; தொண்டர்களுக்கு சித்தியளிக்கும் பெருமாள்; அடிதொழுதே மன்பராவு தொண்டர்கள் உளமனதில் நாளுங்குலவி இன்புற உறைவோன்; பாதமலர் மீதிற் போதமலர் தூவிப் பாடுமவர் தோழன்; அன்பால் தனது தாள் கும்பிடுபவர் தம் பாவம் தீர்த்து அம்புவியிடை அஞ்சா நெஞ்சாக்கம் தரவல்லவன்; அடியார் இச்சையில் எவை எவை உற்றென அவை தருவித்தருள் பெருமாள்; வேண்டிய போது அடியார் வேண்டிய போகமது வேண்ட வெறாதுதவு பெருமாள்; பக்தியுடன் நினைந்து ஏத்தும் அடியார் வினை பற்று வீடு மாமறைப் பொருளாக இருப்பவன்.

— திருப்புகழ்ச் செல்வர் எம்.முத்துகிருஷ்ணன்