திரு. ஆகாஷ். இரா. முத்துகிருஷ்ணன், அறக்கட்டளை உறுப்பினர் ஆகாஷ் குழுமம், திருவண்ணாமலை.

என்னிடம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அருணகிரிநாதர் மணி மண்டப விழா மலர்க் குழுவினர் சார்பாக திரு. அமரேசன் அவர்கள் ஒரு கட்டுரை எழுதித் தரும்படி கூறிய உடனே என் மனதில் தோன்றியது கடலை பற்றி எப்படி கூற முடியும். அதை உணர முடிவதே கடினம், உணர்ந்தபின் எழுதுவது என்பது இன்னும் மிகவும் கடினமானது என்று தோன்றியது.

“அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது!”

என்ற தமிழ் மூதாட்டியின் வாக்கின்படி, இப்பூமியில் பிறந்து, வாழ்ந்து, மறைந்தோர்

எண்ணற்றோர். அதில் மிக சிலரே காலத்தாலும் அழியாது வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். அவ்வகையில் குறிப்பாக தமிழ் உலகில் ஞானியர், அருளாளர்கள் வரிசையில் இப்புண்ணிய முக்தி தரும் தலமாகிய அருணையில் உதித்து, மக்கள் உள்ளத்தில் என்றும் வீற்றிருக்கும் அருளாளர் அருணகிரிநாதர் ஆவார்.

இருப்பினும் மிகப்பெரிய முயற்சி, அத்தகைய அருளாளர்க்கு அவர் பிறந்த மண்ணில் அறுநூறு ஆண்டுகள் கழித்து, அவர் புகழை நினைவு கூறும் வகையில் ஒரு மணி மண்டபம் அமைவது என்பது ஒரு பாராட்டுக்குரிய செயல் ஆகும். அதனால் என் நினைவுகளில் சில கருத்துகளை என் சிற்றறிவுக்குத் தெரிந்ததை பகிர எண்ணி இக்கட்டுரையை எழுதியுள்ளேன்.

ஏன் அவரைப்பற்றி எழுதவேண்டும் என்று சிந்திக்கும்போது ஒரு நிகழ்ச்சி எனக்கு உணர்த்தியது. அது என்னவென்றால் 2002ஆம் ஆண்டு திருவண்ணாமலை கோவில் மற்றும் மலையை தொல்பொருள் அகழ்வாய்வுத்துறை எடுத்துக்கொண்டது. அத்தொல்பொருள் துறையிடமிருந்து மீட்பதற்கு ஓர் குழு அமைத்து அதன்மூலம் அக்குழுவில் உள்ள சிலர் காலஞ்சென்ற சேஷாத்திரி சுவாமிகள், ஆசிரமத் தலைவர், அய்யா திரு. முத்துகுமாரசாமி, அருணகிரிநாதர் விழாக்குழுத் தலைவர் திரு. தனுசு, திரு. அமரேசன், வழக்கறிஞர் திரு. பழனிராஜ், திரு. ராமச்சந்திர உபாத்தியா, அன்றைய உதவி ஆணையாளர் திரு. பொன்.ஜெயராமன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் எல்லோரும் அன்றைய மாண்புமிகு சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் திரு. ஜெகன்மோகன் அவர்களை சந்திக்க நம் நாட்டின் தலைநகர் தில்லிக்கு சென்றிருந்தோம். அவர்கள் முதலில் எங்களை நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்திக்கலாம் என்று கூறியதால் நாங்கள் மதிய நேரத்தில் அங்கு சென்றோம். எங்களை அழைத்துச் செல்லும் நண்பர் வருவதற்கு நேரமாவதால், நாங்கள் தேநீர் அருந்துவதற்கு அங்குள்ள தேனீர் அங்காடிக்கு செல்லும்போது அங்கே பணிபுரிந்து கொண்டு இருந்த திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூரைச் சேர்ந்த ஆய்வாளர் எங்களை பார்த்த உடன் மிக்க மகிழ்ச்சியடைந்து எங்களை நன்றாக உபசரித்து அவர் எங்களுக்கு உணவு எல்லாம் வாங்கித் தந்தார். இதைப்பார்த்து என்னுடன் இருந்த நம் நண்பர்கள் எல்லோருக்கும் ஆச்சரியம், மகிழ்ச்சி, ஆனந்தம் அடைந்தனர். நம் ஊர்க்காரர் என்ற பாசம் எல்லோரிடமும் தோன்றியது. இதை நினக்கும்போது, சாதாரண நம் ஊரைச்சேர்ந்த ஒருவரை தொலைவில் சந்திக்கும்போது ஏற்படுத்தும் பாசம், மகிழ்ச்சி எவ்வாறு அளவிட முடியாதோ, விளக்க முடியாதோ, அதை விட பன்மடங்கு அதிகம் உடையது நம் மண்ணில் பிறந்த, காலத்தால் மறைந்துவிட்டாலும் அவரின் தமிழ் ஞான ஓசை சந்தக் கவியுடன் அவரது பாடல் புலமையையும், அவரின் சிறப்பை உலகமே, மெச்சி புகழும்போது நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி அளவிட முடியாதது. அதனால் தான் இம்மண்ணில் இத்தருணத்தில் நமது நண்பர்கள் இம் மணிமண்டபத்தை உருவாக்குவதில் ஈடுபட்டபோது நானும் அதில் ஓர் சிறு அணில் போன்று இப்பணியில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

அதனால் தான் அருளாளர் அருணகிரிநாதர் மலரில் எழுதுவதில் நாட்டம் ஏற்பட்டது.

எனக்கு அவரை அளவிடும் அளவிற்கு ஞானம் இல்லை என்பதால் அவரைப்பற்றி இவ்வுலகில், மற்ற ஞானியர்கள் அருளாளர்கள் என்ன கூறினார்களோ அதில் ஒரு சிலவற்றை உங்களுடன் பகிர்கிறேன். அதில் குறிப்பாக அருளாளர் தாயுமானவர் எவ்வாறு வியப்புற்றார். அதை நம் தமிழ் அறிஞர் திரு. அ.ச.ஞானசம்பந்தன் அவர்கள் தான் கண்ட அருளாளர்கள் என்ற நூலில் தெரிவித்த கருத்துக்கள் ஒரு சொல்லில் விளக்கிய அருணகிரிநாதருக்கு ஈடு இணை யாரும் இல்லை.

அருணகிரிநாதர் பாடல் காட்டும் உண்மை என்ன? என்றால் திருவள்ளுவர் குறள் மூலம் ஒன்றை சொல்கிறார்.

“எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு”

வள்ளுவர் கூறுகிறார். மெய்ப்பொருளை காண்பதே அறிவு அப்படியென்றால் மெய்ப்பொருள் எது? அதற்கு விளக்கத்தை ஒரே வரியில் கூறிய அருளாளர் நம் மண்ணில் பிறந்த அருணகிரிநாதரே ஆவார்.

அதனை அவர் தன் பாடலில் கூறி உள்ளார். இதனை அருளாளர் தாயுமானவர் அவர்கள் தன் பாடலில் கூறுகிறார்.

மெய்யாக ஒரு சொல் விளம்பினர் யார்?”

“ஜயா அருணகிரி அப்பா உனைப்போல

எந்த மெய்யாக என்றால், 'செம்மான் மகளை திருடும் திருடன்'

இப்பாடலில் மூன்றாவது அடியில் வரும் “சும்மா இரு, சொல் அற” என்பதை தான் ஒரு சொல் என்று கூறியிருக்கிறார் தாயுமானவர். சும்மா இரு என்றால் ஏதோ வாயை மூடிக்கொண்டிருப்பது, மௌனவிரதம் இருப்பது என்பதன்று அதை ஒரு நாளும் நம்முடைய பெரியோர்கள் ஏற்று கொண்டதே இல்லை. சும்மா இருக்கின்றவருடைய மனம் மிக பயங்கரமான முறையிலே வேலை செய்யும். ஆகவே சும்மா இரு என்று மட்டும் அருணகிரியார் சொல்லியிருப்பாரேயானால் அது என் போனறவர்கள் தவறாக புரிந்துகொள்ள இடந்தரும். ஆகையினாலேயே, சும்மா இரு, சொல் அற என்றார். சொல் அறுதல் என்றால் மனத்தில் என்ன ஓட்டம் இல்லாமல் இருத்தல் என்பது பொருளாகும். எண்ணம் எப்படித் தோன்றுகிறது சொல்லின் மூலமாகத்தான் தோன்றுகிறது. சொல் இல்லையானால் எண்ணமில்லை. ஆகவே சொல் அற என்று அருணகிரிப் பெருமான் சொல்லும் போது மனதிலே எண்ணம் எல்லாமல் இருக்க வேண்டும் என்று சொல்லுகின்ற அந்த பெரிய நிலையை நினைத்து பார்த்துத்தான் தாயுமானவர் அவ்வாறு கூறி உள்ளார்.

மேலும் தாயுமானவர் அருணகிரியாரின் ஒரு சொல்லின் சிறப்பை தன் பாடலில், “ஒரு மொழியே பலமொழிக்கும் இடங்கொடுக்கும் அந்த
ஒரு மொழியே மலம் ஒழிக்கும் ஒழிக்கு மென் மொழிந்த
குருமொழியே மலையிலக்கு மற்றை மொழி யெல்லாங்
கோடின்றி வட்டால் கொள்வதொக்குங் கண்டாய்” (

கோடின்றி வட்டால் கொள்வதொக்குங் கண்டாய்” (நினைவொன்று-2) ன

இந்த ஒரு சொல் மலமாகிய குற்றங்களை ஒழிக்கக்கூடியது. அதாவது ஆணவம், கன்மம், மாயை என்பவை அழிக்கக்கூடியது. அககுற்றம் நீங்கினால், உள்ளம் அமைதி அடையும், உள்ளம் அமைதியானால் அதுவே கோயில்...

“உள்ளம் பெருங்கோவில்
ஊனுடம்பு ஆலயம்”

என்ற திருமூலர் வாக்கின்படியும் நாம் நம் மண்ணில் தோன்றிய அருளாளர் அருணகிரியார் வாக்கின்படியும் அவன் அருளாலே, அவன்தாள் வணங்குதல் என்பதகேற்ப “சும்மா இரு, சொல் அற” நிலை அடைய வேண்டுவோம்.

★★★

மதுரை திருப்புகழ் சாமி ஐயர்

மதுரை திருப்புகழ் சாமி ஐயர் திருப்புகழ் மீது அளவற்ற பற்று கொண்டு திருப்புகழைப் பாடி பரப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தெற்காடி வீதியில் 1919 ஆம் ஆண்டு திருப்புகழ்ச் சபையை நிறுவினார். இனிய பண்முறையில் திருப்புகழைப் பாட நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு ஆர்வமுடன் பயிற்சி அளித்தார்.திருச்செந்தூர், திருமலை, திருநெல்வேலி, ஐதராபாத் முதலிய ஊர்களில் திருப்புகழ்க் குழுவினரை உருவாக்கி ஆங்காங்கே விரிவுரையும் செய்து மக்களிடம் திருப்புகழ்ச் சுவையும் பக்தியும் வளர்த்தார். எப்பொழுதும்

திருப்புகழைப் பாடுவதும் திருப்புகழிற்கு உரை கூறுவதும் முருக வழிபாடு செய்வதுமே இவரது வாழ்க்கை முறையாக அமைந்தது.ஒரு நாள் விடியற்காலையில் அவரது கனவில் திருவண்ணாமலை கோபுரமும் அருணகிரியாருக்கு முருகன் குருவாக வந்து உபதேசித்த காட்சியும் தோன்றின. அந்த காட்சியை அவர் ஓவியம் ஆக்கினார். அதன் பின் ஆண்டுதோறும் திருவண்ணாமலைக்குச் சென்று அங்கு திருப்புகழ்ப் பரப்பும் பணியைச் செய்தார்.இவர் ஒரு முறை திருவண்ணாமலையில் இருக்கும்பொழுது கிருபானந்த வாரியார் சுவாமிகளுக்கு குரு ஸ்தானத்தில் சடாக்ஷரமந்திர உபதேசம் செய்தார். மதுரையில் சுவாமிகள் ஆரம்பித்த திருப்புகழ் சபையின் நூற்றாண்டு விழா 2019ஆம் ஆண்டு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.