அருணகிரிநாதர் முருகப் பெருமானின் மேல் அதீத பக்தி கொண்டு அவரின் பூரண அருளால் நுட்பமான சந்தம், சொல்லாட்சி, பொருளாட்சி , தத்துவ நெறி, தாள வேலைப்பாடுகள், இசைநயம் நிறைந்து, பக்தி ரசம் பொங்கும் திருப்புகழ் என்னும் அரிய நூலை முருகனுக்கும், தமிழ் அன்னைக்கும் ஆரங்களாக அணிவித்திருக்கிறார்.
தமிழுக்குத் தனியொரு பெருமையைத் தருவது திருப்புகழ்; பக்தி இலக்கியங்களில் திருப்புகழ் உயர்ந்த ஸ்தானத்தை வகிக்கின்றது.
அருணகிரிநாதரின் கொஞ்சும் தமிழும், விஞ்சும் சந்த அமைப்பினாலும், லய நுணுக்கங்களாளும் எல்லாவற்றிற்கும் மேலாக வெற்றிக் குமரனைத் தொழும் பக்தி அநுபூதியைத் தருவதாலும் இக்கவிஞர் பெருமானுக்கு ஈடு இணை இல்லை என்று சொன்னாலும் மிகை ஆகாது
திருப்புகழ், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, திரு விருத்தம், வகுப்பு மற்றும் பல தொகுப்புகளை நமக்கு அருளியிருக்கும் அருணகிரிநாதர் அவர்களுக்கு திருவண்ணாமலை திருத்தலத்தில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளமை குறித்து மிகுந்த மகிழ்ச்சியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த நற்பணிக்காக உழைத்த நல்ல உள்ளங்களுக்கு பக்தகோடிகள் சார்பாக நன்றிகளை உரித்தாக்குகின்றேன்.
முத்தமிழ் வித்தகர், அருட்கவி அருணகிரியாரின் திருநாமமும் திருப்புகழும் உலகெங்கிலும் ஒலித்து மாந்தரிடையே அன்பும் அமைதியும் நிலவ எல்லாம் வல்ல முருகப் பெருமானின் அருளை வேண்டுவோமாக
- முருகவேல் பன்னிரு திருமுறை :- ஆறு தொகுதிகள். உரையாசிரியர்: தணிகைமணி
- வ.சு.செங்கல்வராயப் பிள்ளை.
- திருப்புகழ் உரை: குகத்திரு கிருபானந்தவாரியார் சுவாமிகள்: ஆறுபடை வீடுகள்,
- பஞ்சபூதத் தலங்கள், இதரத் தலங்கள் சில மற்றும் பொதுப் பாடல்கள்.
- திருப்புகழ் உரை: தமிழிலும், ஆங்கிலத்திலும் திரு கோபாலசுந்தரம்

