திருப்புகழில் சந்த ஒலிகள்
திரு. சம்பந்தம் குருக்கள், புதுச்சேரி.
“வாக்கிற்கு அருணகிரி வாதவூரர் கனிவினில்
நோக்கிற்கு நக்கீரத் தேவர் - தாக்கிற்கு
திருஞான சம்பந்தன் நயத்திற்கு சுந்தரனார்
சொற்குறுதிக் கப்பரெனச் சொல்”
என்ற வெண்பாவில் சந்தக்கவி அருணகிரிநாதரே முதன்மைப்படுத்தப்படுகின்றார். என்ன காரணம் என்றால் அவர் கந்தனை வந்தனை செய்து சந்தத்தைச் சொந்தமாக்கியதே ஆகும்.
“ஈரேழு பதினான்கு உலகத்திலும் திருப்புகழ் போல ஒரு நூலில்லை” என்பது திருமுருக
கிருபானந்த வாரியார் வாக்கு. பதினாறாயிரம் பாடல் பாடியிருப்பினும் கிடைத்தது 1324 பாடல்களே. அதில் 1008 சந்தவகைகளைப் புகுத்தி சந்த நடைக்கு ஒரு பாட்டை அமைத்துள்ளார் சந்தப்பாவலர்.
“ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு”
என்பது வள்ளுவம்.
இசை என்ற சொல்லிற்கு சரிகமபதநி என்ற ஏழு ஸ்வரங்களால் கட்டமைக்கப்படுகின்ற இசை (வருதண்டிஞ) என்று ஒரு பொருள். புகழ் பட வாழ்தல் என்று வேறொரு பொருள். இசையோடு இசைந்து வாழ்கின்ற பாடகர்கள் ஒருவர் கூட தம் வாழ்வில் சோடை போகவில்லை என்பது அகிலம் அறிந்ததே.
“ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே;”
“ஏழிசையாய் இசைப்பயனாய் என்னுடைய தோழனுமாய்”
“நாதவிந்து கலாதி நமோ நம”
என தெய்வங்கள் இசை வடிவமாகவே போற்றப்படுகின்றன. 'இசையால் வசமாகா இதயமெது? இசையே இறைவடிவம் எனும்பொழுது' என்ற பாடலும் இறையே இசை; இசையே இறை என்பதை தெளிவாக விளக்குகின்றது.
இசையைத் தருகின்ற கருவிகளாக தோற்கருவிகள், துளைக்கருவிகள், தந்திக்கருவிகள், கஞ்சக்கருவிகள், வாய்ப்பாட்டு ஆகியனவற்றை, இசையுலகம் சுட்டுகின்றது. அருணகிரிநாதர் அவர்தம் கால வழக்காற்றிலும், பயன்பாட்டிலும் உள்ள இசைக்கருவிகள் அனைத்தையும் பட்டியலிட்டு பதிவாக்கியுள்ளார். இவற்றின் மூலம் இசை அறிவையும் இசையின் வழி ஒழுகும் புலப்பாட்டுத் திறனையும் அறியலாம். இசைக்கருவிகளையும் அவற்றின் ஓசை விசைகளையும் அருணகிரிநாதர் தம் பாடல்களின் வழி தெளிவாக்கியுள்ளார்.
அருணகிரியார் தம் பாடலில் குறிப்பிட்டுள்ள முக்கியமான சில இசைக் கருவிகளைக் காண்போம். அவை அம்பணம்,இடக்கை ,இடி பேரி, உடுக்கை, ஓத்து, கரடி, கிடுகிடு, குடந்தம், குழல் கொக்கரை, கொம்பு, சங்கு, சலிகை, சித்தரவீணை தபலை, தம்பட்டம், தமருகம் தவண்டை, தவில்,தாளம் திமிலை, துடி, தந்துமி, நரம்பு வீணை, பம்பை , பறைபேரி முரசு மற்றும் வீணை.
இதுபோல் இன்னும் பற்பல இசைக் கருவிகளை பற்றி அவர்கள் பாடியுள்ளார்கள். இவற்றுள் பெரும்பான்மையானவை இப்பொழுது வழக்கில் இல்லை. ஒரு சில கருவிகள் மட்டுமே இன்று இசைக்கப்படுகின்றது.
இசை வாத்தியங்களை பற்றி குறிப்பிடுதோடு மற்றும் நின்று விடாமல் அருணகிரியார் அந்த வாதியங்கள் ஒலிக்கும் ஓசையையும் எழுத்து வடிவத்தில் செப்பி புரட்சி செய்திருக்கிறார்கள்.
காளம், பகலை, சிமிலை, கம்பட்டம் ஆகிய இசைக்கருவிகள் ஒலித்தின்ற நிகழ்வை
தாளம், பதலை, திமிலை, தம்பட்டம் ஆகிய இசைக்கருவிகள் ஒலிக்கின்ற நிகழ்வை
“ததத ததததத தந்தத்த தந்ததத
திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி
தகுகு தகுதகு தந்தத்த தந்தகுகு - திந்தி தோதி
சகக சககெணக தந்தத்த குங்கெணக
டிடிடி டிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி
தகக தகதக தந்ததத் தந்தகக – என்றுதாளம்
பதலை திமிலைதுடி தம்பட்டமும் பெருகு”
என்று அவை ஒலித்த விதத்தை தெளிவாகப் பாடியுள்ளார்.) மேலும் முரசு,சங்கு, பேரிகை, மேளவகை, முழவு எக்காளம் போன்ற கருவிகளின் ஓசையை
“தனன தந்தன தானனா தனதனன
தினன திந்தன தீததோ திருத்திகு
தகுத குந்ததி தாகு தோ வெனமுடழவு - வளை பேரி
தவில்க ணம்பறை காளமோ டிமிலைதொனி
இனமு ழங்கெழு வேலைபோல் அதிரபொரு
சமர் முகங்களின் மேவியே விருத சொலும் அவனே
சமர் முகங்களின் மேவியே விருது சொலும் அவுனோர்கள்”
என்று பதிவிட்டுள்ளார்.
சதபேரி என்ற கருவி முழங்குவதை,
“தத்ததை னாத னத்தந் ரத்தனத னாத னத்தந்
தத்ததை னாக னத்தந் - தகுதிதோ
தக்குககு டூடு டுட்டுண் டிக்குகு டீகு தத்தந்
தத்தனத னான னுர்த்துஞ் - சதபேரி”
என்று பாடியுள்ளார்.
பல முழவுகள் ஒலித்த நிகழ்வை,
“செகுதகெண கெணசெகுத செக்குச்செ குச்செகுத கிருதசெய செயகிருது தொக்குத் தொகுத் தொகுத டிமிட்டிமி டிமிடிமிட ட்டிட்டி டிட்டிட்டி டிட்டிமிட டிடி தீதோ திரிகடக கடகதிரி த்திக்ர தித்ரிகட திமிர்ததிமி திமிர்ததிமி தித்தித்தி தித்தித்திதி செணு செணு தனசெணுத தத்தித்தி குத்றிகுட தகுதீதோ தகுடதிதகு திகுடதிமி தத்தத்த தித்திகுட குகுகுகுகு குகுகுகு குக்குக்கு குக்குகுத தரரர ரிரிரி ரிற்றித்த ற்றிரிரி - எனவேநீள்
சசிமுழவு பலவுமிரு பக்கத் திசைப்ப”
எனப் பதிவிட்டுள்ளார். தாளம் ஒலித்தலை மிகவும் அழகாக கீழ்வருமாறு சுட்டுகின்றார்.
“திதிதிதிதி திதிதிதிதி தித்தித்தி திந்திதிதி
தத்தத தந்தகுதக
தெகுததெகு தெததெத தெத்தெத் - தெந்ததெத
திகட்டி கண்டிட
ஜெகணகெண கெணஜெகுத தெத்தித்ரி யந்திரித
தக்கத்த குந்தகுந்த - திந்தி தீதோ
திகுடதிகு தொகுடதொகு திகட்டி கண்டிடகட
டக்கட்ட கண்டகட
டிடிடுடு டிடிடுடு டிக்கட்டி கண்டிகட
குட்டுட்டு டுண்டுடுடு
திகுகுதிகு திகுகு திக்குத்தி குந்திகு
குக்குக்கு குங்குகு - என்று தாளம்”
இசையாளர்கள் குறிப்பாக வாத்தியக் கலைஞர்கள் வாஞ்சியமாய் கற்று பயன்படுத்த வேண்டிய வரிகள் அவை. இவ்வரிகளில் தாளம், பெரிய திமிலை, கரடிகை, இடக்கை, துடி, உடுக்கை, பதலை பலவகையான முடிவுகள் மொகு மொகென மேற்கண்டவாறு ஒலித்தன என்பதை இவ்வுலகில் எவரும் பதிவு செய்யாத அளவில் அருணகிரியார் பதிவு செய்துள்ளார். மேலும்,
“தகுத்தகு தகுதகுதி திகுதிதிகு திகுதிகுதி
தங்குத் தகுத்தகுகு திங்குத் திகித்திகுகு
டணணடண டணடணண டிணிணிடிணி டிணிடிணிணி
டண்டட்ட டட்டடண டிண்டிட்டி டிட்டிடிணி
தரரதர தரதரர திரிரிதிரி திரிதிரிரி
தன்றத் தரத்தரர தின்றித் திரித்திரிரி - என்று தாளன்று
தெகுதிவெகு முரகரடிகை டமரு ழவுதவில்
தம்பட்ட மத்தளமி னம்பட் டடக்கைபறை
பதலைபல திமிலைமுத லதிரவுதிர் பெரியதலை”
எனப்பல கருவிகளின் ஒலிகளை சந்தநடையில் பதிவு செய்கிறார்.
வாத்தியங்கள் எழுப்பும் ஓசையை குறிப்பிட்டது போல் அருணை வள்ளல் வண்டினங்களின் இசையையும், வஞ்சியர்களின் வலையோசையையும், வான் பறவைகளின் ஒலியையும், விஞ்சிய அழகு பொருந்திய ஆபரணங்களின் ஒலியையும், வங்கக் கடலின் அலைகளின் சத்தத்தையும், வீரர்கள் போரின்போது எழுப்பும் சந்தடியும், விரிசடையோனின் நடன ஓசையையும் கூட பதிவு செய்துள்ளார்கள்.
ஈக்கள் மொய்கும்போது வெளிப்படும் ஒலியை,
‘தெனன தெனதௌ தெத்தென’ என்றும்,
‘தந்த னந்தன தனதன தன என வண்டு விண்டு இசை முரல்
தரு மண மலர் தங்கு ‘
என வண்டு இசையை வெளி விட்டு ரீங்காரம் செய்யும் காட்சியையும் நம் முன்னே நிறுத்துகிறார்.
எனி வெண்டு இலைசையை சவளை விட்டு ர்வாக்கம் செய்யும் காட்சியையும் நம் முன்னே நிறுத்துகிறார். 319 கன்னியர்களின் கைவலைகள் ‘கலகலென' ஒலித்தது என்பதை 'அளகநிரை குலையவிழி' என்று துவங்கும் திருப்புகழில் கூறியுள்ளார். மேலும் பறவைகளின் செயல்களை மிகத் துல்லியமாக சந்த ஒலிகளின் வழி பதிவு செய்கிறார் அருணகிரிநாதர்.
‘முந்து தமிழ் மாலை’ எனத் தொடங்கும் பாடலில் மயிலின் நடையழகை மிகத் துல்லிய ஓசை வழி பதிவிட்டுள்ளார்.
“திந்தி திமி தோதி தீதித்தீதித்
தந்ததனதானத் தானத்தான
செஞ்செனகு சேகு தாளத்தோடு நடமாடுஞ்
செஞ்சிறிய கால் விசாத் தோகைத்
துங்க அனுகூலப் பார் வைத்தீர
செம்பொன் மயில்மீதிலே எப்போது - வருவோயா”
என்பது அப்பாடல் வரிகள்.
'முத்தைத்தரு' என தொடங்கும் முதற் பாடலில் முதிய கூகைகள் போர்க்களத்தின்கண் வீழ்ந்துபட்டுள்ள உடல்களை தம் அலகால் குத்தி இழுக்கின்றன. இதனை,
“கொத்துப் பறைக் கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை”
என்று ஓசை இசையோடு பதிவு செய்துள்ளார்.
சதங்கையும் தண்டையும் எங்ஙனம் ஒலிக்கின்றன? என்ற வினாவிற்கு,
“தந்தன தனந்தனந் தனவெனச்
செஞ்சிறு சதங்கைகொஞ் சிடமணித்
தண்டைகள் கலின்கலின் கலினெனத் - திருவான”
என்று விடை தருகிறார் அருணகிரியார்.
கடல் அலைகளை வீசும் போது எழும் சத்தத்தை ‘மொகுமொகு’ என்று வர்ணிக்கின்றார்.
சூரர்கள் போர்களத்திற்கு வரும் போது எழுகின்ற சந்தடியை
“அடல்வந்து முழங்கியிடும்பறை
டுடுடுண்டு டுண்டுடு டுண்டென
அதிற்கின்ற அண்ட நெறிந்திட வரு சூரர்”
என்று பதிவிட்டுள்ளார்.
இசையோடு நடிகர்கள் மேடையில் நடித்த காட்சியை,
“தோதிமி தித்தித் திமித்த டிங்குகு
டிகுகு டிக்குட் டிகுக்கு டிண்டிமி
தோதிமி தித்தித் தனத்த தந்தவெ - னிசை யோடே
சூழ நடித்த.....”
என்று குறிப்பிட்டுள்ளார் சந்தக்கவி.
எண்குணத்தான் ஈசனின் எதிர் நடனத்தின் ஓசையை
‘திக்கிட தரிகிட தீதோ மெனவொரு
சித்திர வெகுவித வாதா டியபத ...... மலராளன்'
என்று வர்ணிக்கின்றார்.
அதே போல் நிமலனின் துவக்க நர்த்தனம் (நடனம்) ஆடும் காட்சியை,
"தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு செகுச்செ குச்செகு கசேசே செக்கண தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு தொந்ததீதோ துருட்டு டுட்டுடு டுடு டுடுடுடு திருத்தி குத்திகு தீதோ எனவொரு துவக்க நர்த்தன மாடா வுறைபவர் - தொண்டர் பேணும்”
என்று பதிவிட்டுள்ளார்.
இங்ஙனம் நம் சந்தக்கவி பல்வகை இசைக்கருவிகள் எப்படி ஒலிக்கின்றன, மயில் எங்ஙனம் நடம்புரிகின்றது, நாட்டியம் ஆடுகையில் எழும் ஒலிகள் என பல்வகை ஒலிகளை சந்தத்தோடே பதிவு செய்துள்ளமை உலகில் வேறு எவரும் செய்திராத சாதனை. இவர் தந்தது நமக்கு நல்லதொரு போதனை, திருப்புகழைப் படிக்காவிட்டால் மனித வாழ்க்கை வேதனை. எனவே நாம் வணங்க வேண்டும் நமது சேந்தனை.
முருகா சரணம்! அருணகிரி சரணம்.
★★★
முருகன் அருள்வாக்குதர எழுந்த குருவாக்கு திருப்புகழ்
அருணகிரியார் அருளிச் செய்த அனைத்துத் திருப்புகழ்ப்
பாடல்களும் அற்புதமே. எனினும் அடியார்கள் தினமும் தவறாமல்
பாராயணம் செய்து பயன்பெற சில பாடல்களின் முதலடி
கொடுக்கப்பெற்றுள்ளன.
ஐந்து பூதத்தல அருட்பிறப்புகழ்
- கருமமான - காஞ்சிபுரம்
- அனித்தமான - திருவானைக்கா
- சிவமாதுடனே - திருவண்ணாமலை
- எழுகடல் மணலை - சிதம்பரம்
- சிரத்தானத்தில் - திருக்காளத்தி
அற்புதத் திருப்புகழ் ஆறு - பொது
- நீத்த முற்றுனை 2.நீலங்கொள் 3.துள்ளுமத
- பிறவியலை 5.நாளும் மிகுத்த 6.வானப்புக்கு
“வேலன் வாய்த்த திருப்புகழ் கற்றவர் சீலம் ஏத்திய சித்த பிரசித்தரே”
— தொகுப்பு : திருப்புகழ் அமுதன்

